சேதமடைந்த மரப்பாலத்தை சீரமைக்க வேண்டும்

குடவாசல் அருகே ஆற்றின் குறுக்கே உள்ள சேதமடைந்த மரப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-04-12 00:15 IST

குடவாசல்:

குடவாசல் அருகே ஆற்றின் குறுக்கே உள்ள சேதமடைந்த மரப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடமுருட்டி ஆறு

குடவாசல் அருகே உள்ள அத்தி கடையில் குடமுருட்டி ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பொதுமக்கள் சென்று வரும் வகையில் மரப்பாலம் உள்ளது. இந்த ஆற்றின் மறுபக்கத்தில் தஞ்சை மாவட்ட பகுதியான கீரனூர், ஆரியசேரி, பருத்திச்சேரி, செம்மங்குடி ஆகிய கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரி, பள்ளி-கல்லூரி, கடைத்தெரு ஆகியவற்றிற்கு குடவாசலுக்கு தான் வரவேண்டும். எனவே இவர்கள் சென்று வருவதற்கு இந்த பாலம் பயனுள்ளதாக இருந்தது.

சேதமடைந்த மரப்பாலம்

இந்த பகுதி மக்கள் 50 ஆண்டுகளாக இந்த பாலத்தின் வழியாகத்தான் குடவாசலுக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த பாலம் நடந்து செல்ல முடியாத நிலையில் சேதமடைந்து உள்ளது.

எனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து அத்திக்கடை குடமுருட்டி ஆற்றின் குறுக்கே உள்ள மரப்பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்