மாற்றுத்திறனாளிகளின் நலன் பேணும் அரசாக திமுக அரசு விளங்கி வருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாற்றுத்திறனாளிகளின் நலன் பேணும் அரசாக திமுக அரசு விளங்கி வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-16 06:21 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தில் ரூ.1,763 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மாற்றுத்திறனாளிகளின் நலன் பேணும் அரசாக திமுக அரசு விளங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் நலனில் திமுக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து உயிர்களும் ஒன்று; எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை. மாற்றுத்திறனாளிகளின் கண்ணியம், தனிப்பட்ட சுதந்திரம் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்