`திராவிட மாடல் என்பதற்கு பதில் வேறு பெயர் பயன்படுத்தி இருக்கலாம்' தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்தி இருக்கலாம் என்று புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2022-12-12 00:10 GMT

நெல்லை,

புதுச்சேரியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கடும் பாதிப்பு தடுக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பலர் வீடுகளை, வாகனங்களை இழந்து உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள்.

ஜி20 மாநாட்டிற்கு தலைமை பொறுப்பேற்றுள்ள இந்தியா நாடு முழுவதும் 200 இடங்களில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதில் தெலுங்கானாவில் 6 இடங்கள், புதுச்சேரியில் ஒரு இடம், தமிழகத்தில் 4 இடங்களில் மாநாடு நடக்க உள்ளது.

திராவிட மாடல்

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி என்னை கிரண்பெடியுடன் ஒப்பிட்டு கூறி வருகிறார். அதை நான் விரும்பவில்லை. நான் கவர்னர் பணியை மட்டும்தான் செய்கிறேன். அரசியல்வாதியாக செயல்படவில்லை. மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேனா என்பது குறித்து இப்போது கூற முடியாது.திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்தி இருக்க வேண்டும். திராவிட மாடல் என்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. மாடல் என்பது தமிழா? திராவிட மாடலுக்கு பதிலாக முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்