மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி சாவு

நத்தம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் விவசாயி பலியானார்.;

Update:2023-09-04 01:45 IST

நத்தம் அருகே உள்ள லிங்கவாடியை சேர்ந்தவர் கோக்காளி (வயது 57). விவசாயி. நேற்று இவர் தனது வீட்டின் அருகே உள்ள மாமரத்தில் மாங்காய்கள் பறிப்பதற்காக ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த நத்தம் போலீசார் அங்கு விரைந்து வந்து, கோக்காளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்