எருது விடும் திருவிழா நடத்த அனுமதிக்கேட்டு விழாக்குழுவினர் மனு

பொய்கை மோட்டூரில் எருதுவிடும் திருவிழா நடத்த அனுமதிக்கேட்டு விழாக்குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2023-03-31 12:35 GMT

எருது விடும் விழா

வேலூர் மாவட்டத்தில் பொங்கல்பண்டிகையையொட்டி எருதுவிடும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழா பல்வேறு கிராமங்களில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும். அதன்படி இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் பல்வேறு கிராமங்களில் விழா நடைபெற்று வருகிறது.

வேலூரை அடுத்த பொய்கை மோட்டூர் கிராமத்தில் எருதுவிடும் திருவிழா நடத்த அனுமதி கேட்டு விழாக்குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

அனுமதி வழங்க வேண்டும்

எங்களது கிராமத்தில் ஆண்டுதோறும் எருது விடும் திருவிழா நடத்தி வருகிறோம். கடந்தாண்டு வாடிவாசலில் இருந்து வெளியே ஓடி வரும் மாடுகள் நெல் பயிரிட்டுள்ள விளை நிலங்களுக்குள் ஓட வாய்ப்பிருந்தது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் விழா நடத்தப்படவில்லை. ஆனால் இந்தாண்டு அறுவடை முடிந்துள்ளது. விவசாய நிலங்களில் பயிர்கள் ஏதும் பயிரிடப்படவில்லை.

எனவே இங்கு விழா நடத்த பொதுமக்களும், விவசாயிகளும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதன்படி விழா நடத்துவதற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும். வருகிற 12-ந் தேதி விழா நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறோம். அதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்