முதலாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்கியது

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் முதலாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்கியது.;

Update:2023-05-27 00:30 IST

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் முதலாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது. கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் விக்னேஸ்வர பூஜை, சிறப்பு வழிபாடு, வெள்ளி முஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவத்துடன் கடந்த புதன்கிழமை தொடங்கியது. தொடர்ந்து மயில் கொடியேற்றம், கேடய உற்சவமும், மாலையில் மலையடிவாரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அன்னவாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று காலை யாகசாலை பூஜை, இந்திர விமானத்தில் புறப்பாடு, மாலையில் பூத வாகனத்தில் திருவீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து தினமும் காலை, மாலையில் சூரியபிரபை, ஆட்டுக்கிடா வாகனம், நாகவாகனம், சந்திரபிரபை, வெள்ளி ரிஷப வாகனம், புஷ்பபல்லக்கு வீதிஉலா, மான் வாகனம், வெள்ளி மயில்வாகனம், இந்திரவிமானம், கற்பக விருட்சம் வீதி உலா, திருகல்யாண உற்சவமும், 2-ந் தேதி தேர் வீதி உலா, 3-ந் தேதி ஷண்முக புஷ்கரணி தடாகத்தில் தெப்பல் உற்சவம், 4-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமி, செயல்அலுவலர் சங்கர் மற்றும் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்