வீட்டுக்குள் புகுந்த உடும்பு பிடிபட்டது
கடையநல்லூர் அருகே வீட்டுக்குள் புகுந்த உடும்பு பிடிபட்டது.;
கடையநல்லூர்:
அச்சன்புதூர் குட்டித்தெருவில் சேக் என்பவர் வீட்டில் உடும்பு ஒன்று புகுந்தது. இதுபற்றி கடையநல்லூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மேக்கரை பீட் வனவர் அம்பலவாணன் தலைமையில் வனத்துறையினர் ராஜா, ஜெயசீலன் ஆகியோர் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் புகுந்த உடும்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.