பெண் அணிந்திருந்த நகை மாயம்
ஓடும் பஸ்சில் பெண் அணிந்திருந்த நகை மாயமானது.;
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி திலகலட்சுமி (வயது 63). இவர் ராமலிங்கா மில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு பின்னர் மீண்டும் பஸ்சில் அருப்புக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் இறங்கினார். அப்போது தான் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திலகவதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.