கோத்தகிரி
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் குணா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தபோது, அதில் ஒரு பிளாஸ்டிக் கேனில் 5 லிட்டர் கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர் அதில் அவர் ஊட்டி அருகே தூனேரி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 35) என்பதும், அவர் சமவெளி பகுதிகளில் இருந்து கள்ளை வாங்கி விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 5 லிட்டர் கள்ளையும் பறிமுதல் செய்தனர்.