பெண் வக்கீலிடம் பணம் திருடியவர் சிக்கினார்

ரெயில் நிலையத்தில் பெண் வக்கீலிடம் பணம் திருடியவர் சிக்கினார்.;

Update:2022-06-10 23:05 IST

கோவை, 

கோவையை அடுத்த ஆலாந்துறை அருகே போளுவாம்பட்டியை சேர்ந்தவர் அனிதா (வயது 24), வக்கீல். சம்பவத்தன்று இவர் பஸ்சில் ரெயில்நிலையம் வந்து இறங்கினார். அப்போது அவருடைய கைப்பையில் இருந்த ரூ.1000 மற்றும் 10 வெள்ளி நாணங்களை பெண் ஒருவர் திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் பரமக்குடியை சேர்ந்த திலகா என்கிற திலகா மாரி (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைதுசெய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்