பெண்ணிடம் செல்போன்-பணம் திருடியவருக்கு வலைவீச்சு

பெண்ணிடம் செல்போன்-பணம் திருடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-05-11 00:36 IST

கரூர் தெற்கு காந்திகிராமம் சிவாஜி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி நீலாவதி (வயது 53). இவர் கரூர் காந்திகிராமம் குமார் ஸ்டோர் பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், நீலாவதியிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து அவரது கைப்பையில் இருந்த ரூ.1500 மற்றும் செல்போனை திருடி சென்றார். இதுகுறித்து நீலாவதி கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்