அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டில் சிக்கின

தேவசகாயம்மவுண்டில் அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டில் சிக்கின

Update: 2023-07-31 20:54 GMT

ஆரல்வாய்மொழி, 

ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம்மவுண்டில் பிரசித்தி பெற்ற புனித தேவசகாயம் திருத்தலம் மற்றும் புனித வியாகுல அன்னை ஆலயம் ஆகிய இரட்டை திருத்தலங்கள் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த ஆலய வளாகத்தில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து அங்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தன. இந்தநிலையில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்ைக விடுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட வன அதிகாரி இளையராஜா உத்தரவுபடி பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ரவீந்திரன் தலைமையில் வனக்காப்பாளர் அசோக், வன ஊழியர் துரைராஜ், வேட்டை தடுப்பு காவலர்கள் ஜெகன், சிவதனிக்கைவேலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு குரங்குகளை பிடிக்க கூண்டு வைத்தனர். அதில் 46 குரங்குகள் பிடிபட்டன. பின்னர், அந்த குரங்குகள் அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்