ஏர்வாடி:
ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார்குளத்தை சேர்ந்த ஒரு வாலிபர் கடந்த ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து நல்லான்குளத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 36) என்பவரை தாக்கியுள்ளார். இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த வாலிபர் அப்பகுதியில் நடைபெற்ற கொடைவிழாவை பார்க்க சென்றார். அப்போது அங்கு ராஜ்குமாருக்கும், அந்த வாலிபருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த வாலிபரை ராஜ்குமார் தாக்கியுள்ளார்.
பின்னர் ராஜ்குமாருடன் வந்த வடிவேல் (34), அருண் (30) ஆகியோர் அந்த வாலிபரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து அந்த வாலிபர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜ்குமாரை கைது செய்தனர்.