ரேஷன் கடையில் தகராறு செய்தவர் கைது

கங்கைகொண்டானில் ரேஷன் கடையில் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-09-13 01:49 IST

கங்கைகொண்டான் அம்மன் சன்னதி தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியன் (வயது 45). இவர் நேற்று கங்கைகொண்டான் ரேஷன் கடை அருகே அரிசி வாங்க நின்று கொண்டிருந்தார். அப்போது திருமால் சன்னதி தெருவை சேர்ந்த ஆறுமுகம் (50) என்பவர் பாலசுப்பிரமணியனிடம் அரிசி வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பாலசுப்பிரமணியன் மறுக்கவே ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் அவரை அவதூறாக பேசி கல்லால் தாக்கினார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்