மரக்கடைக்கு தீவைத்தவர் கைது

விக்கிரமசிங்கபுரம் அருகே மரக்கடைக்கு தீவைத்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-05-04 01:18 IST

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 47). இவர் அதே பகுதியில் மரக்கடை வைத்துள்ளார். கடையை நேற்று முன்தினம் வழக்கம்போல் பூட்டி விட்டு சென்றார். அதிகாலையில் கடையில் தீ எரிவதாக அவரிடம் கடை உரிமையாளர் சுதாகர் தெரிவித்துள்ளார். செல்வம் கடைக்கு வந்து பார்த்தபோது ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள மரக்கட்டைகள் மற்றும் எந்திரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

இதுகுறித்து செல்வம் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கடைக்கு தீவைத்ததாக ஆறுமுகம் (67) என்பவரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்