ஆர்.எஸ்.மங்கலம்,
ராமேசுவரத்திலிருந்து திருப்பாலைக்குடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் அரசு பஸ்சில் திருப்பாலைக்குடியை சேர்ந்த பயணிகள் சிலர் ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் ஏறினர். அப்போது பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் திருப்பாலைக்குடியில் பஸ் நிற்காது என்று கூறி பயணிகளை பஸ்சில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அந்த பஸ் திருப்பாலைக்குடி பழங்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து ராமநாதபுரத்தில் நடந்த சம்பவத்திற்கு டிரைவர், கண்டக்டர் இருவரும் சமரசம் பேசியதையடுத்து மக்கள் பஸ்சை விடுவித்தனர்.