வழிதவறி வந்த மானை பொது மக்கள் மீட்டனர்

அரக்கோணம் அருகே வழிதவறி வந்த மானை பொது மக்கள் மீட்டனர்.;

Update:2023-04-08 23:26 IST

அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை பகுதியில் வழிதவறி வந்த புள்ளிமான் ஒன்றை அங்கிருந்த நாய்கள் தெருக்கள் வழியே துரத்தி சென்றன. இதை கண்ட பொது மக்கள் நாய்களிடம் இருந்து மானை மீட்டனர். இதனை தொடர்ந்து பொது மக்கள் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராணிபேட்டை வனத்துறையினர் சென்று மானை மீட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்