மலைப்பாம்பு பிடிபட்டது

ஏர்வாடி அருகே மலைப்பாம்பு பிடிபட்டது.;

Update:2023-03-12 00:33 IST
மலைப்பாம்பு பிடிபட்டது

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே மாவடி புதூரை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் அங்கு பலசரக்கு கடை நடத்தி வருகிறார். அந்த கடையையொட்டி உள்ள தோட்ட வேலியில் மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. இதை பார்த்த பொதுமக்கள் நாங்குநேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அதிகாரி பாபநாசம் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, அந்த மலைப்பாம்பை பிடித்தனர். 13 அடி நீளமுடைய அந்த பாம்பை திருக்குறுங்குடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதை திருக்குறுங்குடி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்