தீயில் எரிந்து கூரை வீடு நாசம்

தீயில் எரிந்து கூரை வீடு நாசம்

Update: 2023-05-17 18:45 GMT

வேளாங்கண்ணி அருகே தெற்குபொய்கைநல்லூர் தெற்கு தெரு கொல்லந்திடல் பகுதியை சேர்ந்தவர் தேவிகா (வயது 55). இவர் தனது கூரை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு திடீரென தேவிகா கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, பிரிட்ஜ், டி.வி. உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்