புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'
வாலாஜாவில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.;
வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் வாலாஜா பஸ் நிலையம் காந்திசிலை எதிரில் உள்ள கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது சேட்டு (வயது 47) என்பவர் நடத்தி வந்த பெட்டிக் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.