கடையில் திருடியவர் கைது

மார்த்தாண்டத்தில் கடையில் திருடியவர் கைது

Update: 2023-07-16 18:45 GMT

குழித்துறை, 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் முண்டா என்ற இடத்தை சேர்ந்தவர் ரஹீத் (வயது 37). இவர் மார்த்தாண்டத்தில் சப்பாத்தி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.

மறுநாள் வந்த போது கடை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு வைத்திருந்த ரூ.6 ஆயிரத்தை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமி கடை பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து ரஹீத் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கேரள மாநிலம் நெடுமங்காட்டை சேர்ந்த விஜயன் (49) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்