மனிதநேய ஜனநாயக கட்சியினர் முற்றுகை போராட்டம்
பொள்ளாச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்;
பொள்ளாச்சி
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று மாலை மனிதநேய ஜனநாயக கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு நகர செயலாளர் ராஜாஜெமீஷா தலைமை தாங்கினார். இதில் பொருளாளர் அப்துல் காதர், துணை செயலாளர்கள் முகமது நசீம், அன்சார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.