தரங்கம்பாடி வரைபடத்தைடேனிஷ் கோட்டை எதிரே வைக்க வேண்டும்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி சிவன்கோவில் அருகே உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள தரங்கம்பாடி வரைபடத்தை டேனிஷ் கோட்டை எதிரே வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-07-31 00:15 IST

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி சிவன்கோவில் அருகே உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள தரங்கம்பாடி வரைபடத்தை டேனிஷ் கோட்டை எதிரே வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட..

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கடற்கரை சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு உள்ள டேனிஷ் கோட்டைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் 1730-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தரங்கம்பாடி வரைபடம் 13 அடி சுற்றளவு உள்ள ஒரே கிரானைடு கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

அந்த கல்வெட்டை பெஸ்ட் செல்லர் நிறுவனம் உருவாக்கியது. அதை தரங்கம்பாடி -டென்மார்க் நல சங்கம் மூலம் 12.11.2011 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டு தூதர் பெர்டி செவன் திறந்து வைத்துள்ளார்.

டேனிஷ் கோட்டை எதிரே...

அந்த கல்வெட்டு இப்போது டேனிஷ் கோட்டைக்கு வடக்கே கடற்கரை அருகில் பழமையான சிந்தாதிரி கோவில் என்னும் சிவன் கோவிலுக்கு பின்புறம் கடற்கரை அருகில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்வதில்லை. அதனால் யாருடைய பார்வையிலும் படாமலும் ,பராமரிப்பு இன்றியும் கிடக்கிறது.

அந்த கல்லை பொக்லின் எந்திரம் மூலம் எடுத்து வந்து சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் தரங்கம்பாடி கடற்கரை டேனிஷ் கோட்டைக்கு எதிரே வைத்து அதை சீரமைக்க வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழும் நிலை ஏற்படும். இதில் சுற்றுலாத்துறை கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்