திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் உண்டியல் திறப்பு - ரூ.20½ லட்சம் காணிக்கை வசூல்

திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.;

Update:2023-06-15 00:15 IST

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் அருகே ஆதிதிருவரங்கம் கிராமத்தில் ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலையத்துறை உதவி இயக்குனர் சிவாகரன், அறங்காவலர் குழு தலைவர் பாலாஜிபூபதி, கோவில் செயல் அலுவலர் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலையில் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோவில் வளாகத்தில் இருந்த 11 உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில் 20 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காணிக்கை எண்ணும் பணியின்போது மணலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்