புதிய நீதிமன்றம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி

புதிய நீதிமன்றம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.;

Update:2022-12-30 01:32 IST

அரவக்குறிச்சியில் ஒரு வாடகை கட்டிடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதனால் அரவக்குறிச்சியில் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் சந்தோசம் ஆகியோர் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்வதற்காக இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன், வழக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்