அரசு கல்லூரியில் தரச்சான்று குழுவினர் ஆய்வு
அவினாசி அரசு கல்லூரியில் தரச்சான்று குழுவினர் ஆய்வு;
அவினாசி
அவினாசி ராஜன் நகரில அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இன்று காலை தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழு உறுப்பினர்கள் கர்நாடக மாநில சீனிவாசா பல்கலைக்கழக ராமண ஐத்தல், டெல்லி பென்னட் பல்கலைக்கழக ் பேராசியர் மணிஷா பல்லா, மராட்டியம் மகாவீர் மகாவித்யாலயா பேராசிரியர் ராஜேந்திர லோகன்டே ஆகியோர் கல்லூரியில் கோப்புகளை பார்வையிட்டும், வகுப்பறைகள் மற்றும கட்டிட அமைப்பு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களுடன் கல்லூரி முதல்வர் ஜெ.நளதம், கல்லூரி பேராசியர்கள் செந்தில், மணிவண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.