கல்வித்துறை செயலி குறித்த பயிற்சி முகாம் முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்

கல்வித்துறை செயலி பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாமை முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-20 19:00 GMT


கல்வித்துறை செயலி பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாமை முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.

பயிற்சி முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள செயலியை பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம் சிவகங்கையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஆனந்தி, உதவித்திட்ட அலுவலர் பீட்டா லெமாயு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெஸிமா பேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பயிற்சியை தொடங்கி வைத்து முதன்மை கல்வி அலுவலர் பேசியதாவது:-

மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் டி.என்.எஸ்.இ.டி. செயலி மூலம் பள்ளிப்பார்வை மற்றும் பயிற்சி பார்வை செயல்பாடுகள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆசிரியர்களது கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள் மற்றும் மாணவர்களது வகுப்பறை செயல்பாடுகள், கற்றல் விளைவுகளின் அடைவு நிலை முதலியவை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

தரவுகள்

பயிற்சியின் போது பயிற்சி செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர்களது கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை வளப்படுத்தி கொள்வதற்கான தகவல்கள் பகிர்வதனை அலுவலர்கள் ஆய்வு செய்து செயலியில் பதிவேற்றம் செய்கின்றனர். இச்செயலியின் மூலமாக அனைத்து திட்டக்கூறுகள் சார்பான தரவுகளை சேகரிப்பது மற்றும் தரவுகளின் உண்மைத்தன்மை இவற்றை குறித்த தகவல் ஒருங்கமைப்பு மற்றும் பள்ளி மேம்பாடு முதலியவற்றை திட்டமிடுவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்தவை இப்பயிற்சியில் பகிரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் விரிவுரையாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை), அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் (இடைநிலை மற்றும் மேல்நிலை), உதவித்திட்ட அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தொடக்கநிலை (சிவகங்கை, தேவகோட்டை), வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் என 274 அலுவலர்கள் பங்கேற்றனர். மாவட்ட ஆசிரிய பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சியாமளா, காளையார்கோவில் வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை பெல்லோக்கள் விஜய் நாகராஜ், பூங்கொடி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்