வேலூர் கோட்டையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

கோட்டை கொத்தளம் கொடிக்கம்பம் அருகே அகழி சுற்றுப்பாதையில் உள்ள உட்புற பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்துள்ளது.

Update: 2022-09-12 22:58 GMT

வேலூர்:

வேலூர் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வேலூர் கோட்டைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் கோட்டை வளாகம் மற்றும் அகழியை பார்வையிட்டு செல்கின்றனர்.

அழகிய அகழியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் வேலூர் கோட்டையின் மதில் சுவர் மற்றும் பக்கவாட்டு சுற்றுச் சுவரில் ஆங்காங்க சில இடங்களில் செடி, கொடிகள் முளைத்துள்ளது.

இதனால் பக்கவாட்டு சுற்றுச்சுவர்களில் மரங்களும் வளர்ந்து காணப்படுகிறது. கோட்டை கொத்தளம் கொடிக்கம்பம் அருகே அகழி சுற்றுப்பாதையில் உள்ள உட்புற பக்கவாட்டு சுவரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்துள்ளது.

கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த சுவர் மண் அரிப்பு காரணமாக கீழே விழுந்துள்ளது. இந்த சுவரை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் செடி கொடிகள் முளைத்துள்ளது. அவற்றை அகற்றவும், பக்கவாட்டு சுவர்களை சீரமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்