வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி இறந்தார்.;

Update:2023-03-19 01:32 IST

இனாம்சமயபுரம் அருகே உள்ள சேனியர் கல்லுகுழியைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 27). கூலி தொழிலாளியான இவர்

நேற்று காலை சிறுகனூர் அருகே உள்ள எதுமலை முஸ்லிம் தெருவை சேர்ந்த ரஷ்யாபேகம் (50) என்பவர் வீட்டில் மராமத்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் சுவர் இடிந்து அவர் மேல் விழுந்தது. இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்