கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

கலசபாக்கம் அருகே கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.;

Update:2023-09-21 22:36 IST

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே ஆதமங்கலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா (வயது 60). இந்த நிலையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் வசந்தா வீட்டின் ஒரு பக்க மண் சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது.

இதில் அதிர்ஷ்டவசமாக வசந்தா உயிர் தப்பினார். மேலும் இடிபாடுகளில் சிக்கிய அவர் கூச்சலிட்டார். உடனடியாக அவரது சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்து வசந்தாவை மீட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் நேரில் சென்று மழையால் சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட வசந்தாவுக்கு தனது சொந்த பணத்தை நிவாரண உதவியாக வழங்கினார். மேலும் விரைவில் தமிழக அரசின் சார்பில் வீடு வழங்கப்படும். அதுவரை பத்திரமாக வேறு இடத்தில் தங்கிக் கொள்ளுமாறு ஆறுதல் கூறினார்.

அப்போது ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், தாசில்தார் ராஜராஜேஸ்வரி உள்பட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்