முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை கடந்தது

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.10 அடியாக உள்ளது.

Update: 2022-09-11 04:57 GMT

கோப்புப்படம் 

கூடலூர்,

கேரளாவில் பெய்துவரும் தொடர்மழையால் முல்ைலபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. மேலும் தமிழகபகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டபோதும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.10 அடியாக உள்ளது. ரூல்கர்வ் முறைப்படி செப்டம்பர் 10-ந்தேதிக்கு பின்னர் 142 அடிவரை தேக்கலாம் என்பதால் அணையின் நீர்மட்டம் உயருமா என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

அணைக்கு 2534 கனஅடிநீர்வருகிறது. 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகைஅணையின் நீர்மட்டம் தொடர்ந்து 70.57 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு 2286 அடிநீர் வருகிறது. மதுரைமாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2069 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 184 கனஅடிநீர் வருகிறது. அதுஅப்படியே உபரியாக திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்ம்டடம் 126.34 அடியாக உள்ளது. 15 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 10.4, தேக்கடி 9.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்