ஆனைமலையில் இளநீர் விலை ரூ.32 நிர்ணயம்

ஆனைமலையில் இளநீர் விலை ரூ.32 நிர்ணயம்;

Update:2023-04-10 00:00 IST

ஆனைமலை

ஆனைமலை ஒன்றியத்தில் 23 ஆயிரம் ஹெக்டர் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தேங்காய் விலை வீழ்ச்சியால் பலரும் இளநீர் பருவத்திற்கு வரும் போது அறுவடைசெய்து வந்தனர். கடந்த வார விலையை விட 1 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதில் நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை ரூ.32 என நிர்ணயம் செய்யப்படுகிறது.

மேலும் ஒரு டன் இளநீரின் விலை ரூ.12,250 என நிர்ணயம் செய்யப்படுகிறது. இளநீர் வரத்து இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்து காணப்படுகிறது. தேவை அதிகமாக உள்ளது. இனி வரக்கூடிய நாட்களில் விலை கனிசமாக உயரும் எனவே குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த தகவலை ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்