சங்கராபுரம் அருகேமரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவுபுளியம்பழம் பறிக்க ஏறியபோது பரிதாபம்

சங்கராபுரம் அருகே புளியம்பழம் பறிக்க மரத்தில் ஏறியபோது தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-03-25 00:15 IST

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சோலை மகன் அசலன் (வயது 55). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த மரத்தில் புளியம்பழம் பறிக்க ஏறினார். மரக்கிளை மீது நின்று கொண்டிருந்தபோது, அசலன் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அசலன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்