கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த வாலிபர் கைது
கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
அம்பை அருகே உள்ள சாட்டுப்பத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 26). இவர் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் அம்பை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த 9 மாதங்களாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அம்பை கோர்ட்டு கணேசனுக்கு பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் அம்பை போலீசார் கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.