பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு வலைவீச்சு
கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
சிங்காநல்லூர்
கோவையை சேர்ந்த 24 வயது பெண், தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று இரவு தனது கணவருடன் கோவை-திருச்சி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஒண்டிப்புதூர் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் அவர்களை வழிமறித்தார். பின்னர் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி, பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனது கணவருடன் சேர்ந்த அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்த அந்த தம்பதியினர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.