தியேட்டர் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

தியேட்டர் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-20 22:46 GMT

தியேட்டர் ஊழியர்

திருச்சி உறையூர் சீனிவாசநகர் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 51). இவர் திருச்சியில் உள்ள ஒரு தியேட்டரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வாணி. இவர் மிளகுபாறை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையே அவரது மகள் ஒரு வாலிபரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பையும் மீறி சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கஜேந்திரன் மனஉளைச்சலில் காணப்பட்டு வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் கஜேந்திரன் தனது வீட்டில் நேற்று முன்தினம் காலை திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி வாணி உறையூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோப்பெருஞ்சோழன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்