கோபிநாதம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

Update:2023-04-02 00:15 IST

அரூர்:

கோபிநாதம்பட்டி அருகே உள்ள நம்பிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 72). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகைகளை திருடி சென்றனர். மீண்டும் வீட்டிற்கு திரும்பிய கோபால் வீட்டில் நகைகள் திருடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்