தாமிர கம்பிகள் திருட்டு
தாமிர கம்பிகளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
விழுப்புரம் அருகே உள்ள வேடம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 55). இவர் சென்னை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் வேடம்பட்டில் உள்ளது. அந்த நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் பராமரித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை அந்த நிலத்துக்கு சென்றபோது அங்குள்ள மின் மோட்டாரில் இருந்த 20 மீட்டர் தாமிர கம்பிகள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து முரளி, காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.