'சார்பதிவாளர் அலுவலகங்களில் நேரடி பணபரிவர்த்தனை செய்யத் தேவையில்லை' - அமைச்சர் மூர்த்தி

ஏ.டி.எம். கார்டு மூலம் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவுக் கட்டணம் செலுத்தலாம் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.;

Update:2023-06-17 15:21 IST

மதுரை,

தமிழ்நாடு அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், சார்பதிவாளர் அலுவலகங்களில் மக்கள் நேரடியாக பணபரிவர்த்தனை செய்யத் தேவையில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது;-

"சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் பணம் எடுத்துவர வேண்டிய தேவையில்லை. சார்பதிவாளர் அலுவலகங்களில் நேரடியாக பணம் செல்லுத்த வேண்டியதில்லை. ஏ.டி.எம். கார்டு மூலம் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவுக் கட்டணம் செலுத்தலாம்.

சார்பதிவாளர் அலுவலகங்களில் யாருக்கும் எதற்காகவும் கையூட்டு தரத் தேவையில்லை. மேலும் ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் பதிவுத்துறை அலுவலகத்தில் நுழையக் கூடாது. பத்திரப்பதிவை மேம்படுத்த ஸ்டார் 3.0 என்ற செயலி விரைவில் கொண்டு வரப்படும்" என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்