திம்பம் மலைப்பாதையில் சரக்கு வேன் பழுதாகி நின்றது; போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் சரக்கு வேன் பழுதாகி நின்றது; போக்குவரத்து பாதிப்பு

Update: 2022-06-17 22:48 GMT

தாளவாடி

கா்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சரக்கு வேன் ஒன்று தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. சரக்கு வேனை கிருஷ்ணா என்பவர் ஓட்டினார். ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதை 10-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று மதியம் 1 மணி அளவில் திரும்பியபோது திடீரென பழுதாகி நின்றது.

இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அங்கு கிரேன் வரவழைக்கப்பட்டு சரக்கு வேனை ரோட்டோரம் நகர்த்திவிட்டார்கள். அதன்பின்னரே வாகனங்கள் செல்ல தொடங்கின. ஒரே நேரத்தில் ரோட்டின் இருபுறமும் நின்ற வாகனங்கள் செல்ல தொடங்கின. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதியம் 2 மணி அளவில் போக்குவரத்து சீரானது.

சரக்கு வேன் பழுதாகி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்