திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், 42-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் திருப்பூர் மேயர் தினேஷ்குமாரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'திருப்பூர் வடக்கு பகுதியில் புதிதாக கட்டி திறக்கப்பட உள்ள புதிய பஸ் நிலையத்துக்கு சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை பெயர் அல்லது தியாகி திருப்பூர் குமரன் பெயர் வைத்து தியாகிகளை கவுரவப்படுத்த வேண்டும். தியாகிகளின் பெயரை அரசு அலுவலகங்கள், கட்டிடங்களுக்கு சூட்டினால் வருங்கால இளைஞர் சமுதாயம் தியாகிகளின் புகழை அறிய வசதியாக அமையும். திருப்பூரில் பெருவாரியான மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். உடன் கவுன்சிலர்கள் கண்ணப்பன், சின்னசாமி, தங்கராஜ், ஆனந்தி, தமிழ்செல்வி ஆகியோர் வந்தனர்.