திருஉத்தரகோசமங்கை கண்மாயில் படித்துறை கட்ட வேண்டும்-கிராம மக்கள் கோரிக்கை

திருஉத்தரகோசமங்கை கண்மாயில் பொதுமக்கள் துணி துவைத்து குளிக்க வசதியாக படித்துறைகள் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-09-22 18:45 GMT

திருஉத்தரகோசமங்கை கண்மாயில் பொதுமக்கள் துணி துவைத்து குளிக்க வசதியாக படித்துறைகள் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கண்மாய்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய கண்மாய், களரி கண்மாய், திருஉத்தரகோசமங்கை கண்மாய் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. அதுபோல் ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள திருஉத்தரகோசமங்கை கண்மாய் அமைந்துள்ளது.

தற்போது வைகை அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரானது பார்த்திபனூர், பரமக்குடி வழியாக ராமநாதபுரம் வந்து பல்வேறு கண்மாய்களிலும் வைகை நீரால் கண்மாய் நிரம்பி வருகின்றது. அதுபோல் திருஉத்தரகோசமங்கை கண்மாயிலும் வைகை நீர் வரத்தால் கண்மாயில் தண்ணீர் அதிகமாகவே உள்ளது.

படித்துறை அமைக்க கோரிக்கை

மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய கண்மாய்களில் ஒன்றாக விளங்கும் திருஉத்தரகோசமங்கை கண்மாயை சுற்றியுள்ள கரைப்பகுதியில் எந்த இடத்திலும் படித்துறை வசதிகள் இல்லை. படித்துறைகள் ஏதும் இல்லாததால் பல ஆண்டுகளாகவே பொதுமக்கள் துணிகளை துவைத்து குளிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். சாலையோரத்தில் உள்ள கற்களை தூக்கி சென்று கண்மாய் கரையில் போட்டு துணி துவைத்து வரும் நிலைதான் இருந்து வருகின்றது.

எனவே திருஉத்தரகோசமங்கை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களின் வசதிக்காக கண்மாய் கரையில் பல இடங்களில் புதிதாக படிக்கட்டுகளுடன் படித்துறைகள் கட்டித் தர வேண்டும் என்று அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்