திண்டிவனத்தில் திந்திரிணீஸ்வரர், லட்சுமி நரசிம்மருக்கு மாசிமக தீர்த்தவாரி

திண்டிவனத்தில் திந்திரிணீஸ்வரர், லட்சுமி நரசிம்மருக்கு மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது.;

Update:2023-03-07 00:15 IST

திண்டிவனம், 

மாசிமகத்தையொட்டி திண்டிவனம் மரகதாம்பிகை உடனுறை திந்திரிணீஸ்வரா், கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி திந்திரிணீஸ்வரர், லட்சுமி நரசிம்மர் ஆகிய சாமிகளிள் உற்சவ மூர்த்திகள் திண்டிவனம், அய்யந்தோப்பு குளக்கரையில் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு சாமிகளுக்கு திருமஞ்சனமும், தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு புறங்களிலும் உள்ள குளக்கரை படிக்கட்டுகளில் அமர்ந்து புனித நீராடி தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து அய்யந்தோப்பில் இருந்து சாமிகள் திண்டிவனம் நகர முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் அசம்பாவிதசம்பவங்கள் நிகழாமல் தடுக்க திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்