திருச்சி சரக டி.ஐ.ஜி.- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

திருச்சி சரக டி.ஐ.ஜி.- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்றனர்.

Update: 2023-08-11 20:18 GMT

திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ஏ. சரவணசுந்தர் கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய பகலவன் நேற்று காலை திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சுஜித் குமார் மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக இடம் மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக வருண் குமார் நேற்று காலை பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறி வரவேற்றார்.

இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் தேங்கியுள்ள குற்ற வழக்குகள் அனைத்தும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருச்சி மாவட்ட மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க, 94874 64651 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணில் வாட்ஸ்-அப் மூலமும் தங்களது தகவல்களை தெரிவிக்கலாம் என்று திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் தெரிவித்துள்ளார். மேலும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று போதை ஒழிப்பிற்கான உறுதிமொழியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் தலைமையில் அனைத்து போலீசாரும் எடுத்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்