வேளாண் பட்ஜெட்; முக்கனி சிறப்புத்திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு

Update: 2024-02-20 04:27 GMT
Live Updates - Page 2
2024-02-20 06:06 GMT

முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த ரூ.41.35 கோடி ஒதுக்கீடு

ஏற்றுமதிக்கு உகந்த மா ரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க 27.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பலாவில் உள்ளூர், புதிய ரகங்களின் சாகுபடி, பலா பதப்படுத்தும் கூடங்கள் அமைக்க 1.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். வாழை பரப்பு விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக 12.73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் -அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2024-02-20 05:57 GMT

துவரை பருப்பு சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த 17.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் 

2024-02-20 05:55 GMT

களர் அமில நிலங்களை சீர்படுத்த 22.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

2024-02-20 05:54 GMT

தமிழகம் முழுவதும் 1,564 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4,773 குளங்கள், ஊரணிகள் தூர்வாரப்பட்டுள்ளன - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2024-02-20 05:53 GMT

ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து மண்ணின் வளம் காக்க 6.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2024-02-20 05:52 GMT

25 லட்சம் விவசாயிகளுக்கு 4,436 கோடி ரூபாய் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

2024-02-20 05:51 GMT

ஊட்டி ரோஜா பூங்காவில் 5 லட்சம் ரூபாய் நிதியில் புதிய ரோஜா ரகங்கள் அறிமுகம் செய்யப்படும்   

2024-02-20 05:49 GMT

பயறு பெருக்குத்திட்டத்தை 4.75 லட்சம் ஏக்கரில் செயல்படுத்த 40.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2024-02-20 05:48 GMT

காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2024-02-20 05:47 GMT

வேளாண் காடுகள் திட்டம் மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Tags:    

மேலும் செய்திகள்