கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வருசநாடு அருகே கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்;

Update:2022-08-05 21:50 IST

வருசநாடு அருகே 64 ஏக்கர் பரப்பளவில் பஞ்சந்தாங்கி கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் பகுதியை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருசநாடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மயிலாடும்பாறையில் உள்ள கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடும்பாறை போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கண்மாய் ஆக்கிரமிப்ைப அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்