புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
ஜோலார்பேட்டையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.;
ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது பால்னாங்குப்பம் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து கடை உரிமையாளர் ராஜா (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.