தக்காளி விலை உயர்வு - அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை

தக்காளி விலை உயர்வு தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Update: 2023-07-31 06:20 GMT

சென்னை,

தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் மாலை 4 மணிக்கு துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்துகிறார்.

தக்காளி விலை உயர்வு தொடர்பாகவும், தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும் தக்காளிக்கு விலை நிர்ணயிப்பது, தக்காளி விற்பனை செய்யக்கூடிய ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதன்படி, சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று தக்காளி வரத்து குறைந்ததால் மீண்டும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ தக்காளி ரூ.20 விலை உயர்ந்து ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் சில்லரை வர்த்தகத்தில் தக்காளி கிலோ ரூ.200க்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்