பல்லுயிர் தலமான அரிட்டாபட்டியில் வனத்துறை உயர் அதிகாரி ஆய்வு

முதல் பல்லுயிர் தலமாக அறிவித்த அரிட்டா பட்டியில் வனத்துறை உயர் அதிகாரி நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2023-08-31 20:13 GMT

மேலூர், 

முதல் பல்லுயிர் தலமாக அறிவித்த அரிட்டா பட்டியில் வனத்துறை உயர் அதிகாரி நேரில் ஆய்வு செய்தார்.

முதல் பல்லுயிர் தலம்

மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி 7 மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன் உள்ள பிராமி வட்ட எழுத்துக்களும், குடவரை கோவில் உள்பட வரலாற்று சின்னங்களும், மிக அபூர்வமான பறவைகள், தேவாங்கு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன.

இவற்றை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமாக அரிட்டாபட்டியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து பல்வேறு அரசு அதிகாரிகள் அரிட்டாபட்டிக்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

வனத்துறை அதிகாரி ஆய்வு

இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கால நிலை மாற்றம் வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியாசாகு, தமிழக பசுமை அமைப்பு அதிகாரி தீபக், மதுரை மாவட்ட வன அலுவலர் குருசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அரிட்டாபட்டிக்கு வந்தனர். அங்குள்ள மலைகளில் வாழும் பல்லுயிர்களையும், அவற்றின் வாழ்விடங்களையும் பார்வையிட்டனர். பின்னர் அரிட்டாபட்டி கிராம மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் கேட்டறிந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்