மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல்

தக்கோலம் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2023-10-27 00:45 IST

அரக்கோணம் தாலுகா அனந்தாபுரம் உரியூர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து இரவில் மணல் கடத்துவதாக மாவட்ட கலெக்டர் வளர்மதிக்கு தொடர் புகார்கள் வந்தன. கலெக்டர் உத்தரவின்பேரில் அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் நேற்று முன்தினம் இரவு தக்கோலம் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது தக்கோலத்தை அடுத்த புதுகேசாவரம் பகுதியில் ஒரு டிராக்டரில் மணல் ஏற்றி கொண்டிருந்தவர்கள், தாசில்தார் வருவதை பார்த்ததும் டிராக்டரை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை தாசில்தார் சண்முகசுந்தரம் பறிமுதல் செய்து தக்கோலம் போலீசில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்